Tamilnadu
“Sorry பாலு..” : கலைஞர் சொன்னதை நினைவு கூர்ந்த அமைச்சர் துரைமுருகன் - தேம்பி தேம்பி அழுத டி.ஆர்.பாலு MP!
தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த புத்தகத்தின் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், இரண்டாவது பிரதியை கவிஞர் வைரமுத்துவும் பெற்று கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்நிழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கலைஞருடன், டி.ஆர்பாலு மற்றும் அமைச்சர் துரைமுருகன் இருந்த சம்பவம் ஒன்றை நினைவுக் கூர்ந்தார். அப்போது பேசிய அவர், “ஒரு விசயத்தில் தலைவர் கலைஞருக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் வாக்குவாதம் இருந்தது.
டி.ஆர்.பாலு அப்படி இல்லை தலைவரே அது சரிவராது என்றார். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கலைஞர் நீ தலைவனா, நான் தலைவனா, நான் சொல்வது தான் சரி எனப் பேசினார். அப்போதும் பாலு, இல்லை என பேச முற்பட்டார்.
'அட ஏய் போடா' என கலைஞர் கூறியதும் பாலு அங்கிருந்து கோபமாக சென்று விட்டார். இதனிடையே, குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக சிறிது நேரம் யோசித்த கலைஞர், "பாலு சொன்னதுதான்பா கரெக்ட். நான்தான்பா அவசரப்பட்டு சொல்லிட்டேன்" என்றார். அதோடு, பாலுவை அழைத்து "என்னை மன்னிச்சிடு பாலு" என கூறினார். தான் சொன்ன கருத்துக்கு தொண்டனிடம் மன்னிப்பு கேட்ட மகத்தான தலைவர் கலைஞர்” என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.
மேலும் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது கண் கலங்கி, டி.ஆர்.பாலு தேம்பி தேம்பி அழுதார். தன்னிலை மறந்து டி.ஆர்.பாலு அழுத சம்பவம் கூடியிருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!