Tamilnadu

செம்மர கட்டைகளை பதுக்கி வைத்ததாக புகார்.. சசிகலா உறவினர் பாஸ்கர் அதிரடி கைது !

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்கில் அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவர் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தண்டனை காலம் முடிந்ததும் சமீபத்தில் அவர் வெளிவந்தார். அவரை போலவே அவரின் உறவினர்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரின் மற்றோடு உறவினரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா நகரில்,  சசிகலாவின்வின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வசித்து வருகிறார்.

இவர் தற்போது சென்னையில் ஒரு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இங்கு சட்டவிரோதமாக செம்மர கட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் பிரிவினர் அவரின் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சுமார் ரூ.48 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த வருவாய் பிரிவினர் சசிகலா உறவினர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வங்கி மேலாளர் பெயரில் போலி கையெழுத்து.. 55 பவுன் நகைகளை மோசடி செய்த வங்கி ஊழியர் - பகீர் சம்பவம்!