Tamilnadu
ஏது குப்புற படுத்தால் புற்றுநோய் வருமா ? -ஷர்மிகா மீது நடவடிக்கை... மருத்துவத்துறை இணை இயக்குநர் உறுதி !
பா.ஜ.க.வின் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சி. இவர் அண்மையில் திருச்சி சூர்யாவின் ஆடியோ சர்ச்சையில் சிக்கினார். அவ்வளவு கேவலமாக சூர்யா பேசியும் கூட "நாங்கள் அக்கா - தம்பி போன்றவர்கள்" என்று பேட்டியளித்தார். இதற்காகவே நெட்டிசன்கள் இவரை கிண்டலடித்து வந்தனர்.
இவருக்கு ஷர்மிகா என்ற மகள் உள்ளார். சித்த மருத்துவம் படித்த இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கி வருவார். உடல் உபாதைகள், இதை சாப்பிடலாம் - இதை சாப்பிடக்கூடாது என்று டிப்ஸ் வழங்கி வருவார்.இப்படி மருத்துவர் என்ற போர்வைக்குள் இருந்து யூடியூப் சேனல் மூலம் மறைமுக மத பிரச்சாரத்தை செய்வதாக ஷர்மிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் மாட்டுக்கறி, கோழிக்கறி உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மாட்டுக்கறி என்பது நாம் கடவுளாக பார்க்கும் ஒரு அழகான விஷயம். அதையும் மீறி சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் DNA-விலே தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் ஆகக்கூடிய சக்தி இல்லை. ஆடு, கோழி, கெளதாரி என நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னை ஏற்படும்" என்றார்.
தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "எடை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 3 கிலோ எடை குறைந்தால் கூட, பின்னர் ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும்" என்றார். இதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்த கூடாது; பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சிறந்தது. எனவே அதனை சாப்பிடுவதில் கவனம் வேண்டும்" என்றார். மேலும் "குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக மாறும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், ஷாம்பூ தான் முடிக்கு விஷம்.." என்று பல விதமான கருத்துக்களையும் வாரி வழங்கி வருகிறார் ஷர்மிகா.
தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் கன்டென்டாக இருக்கும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு டாக்டரை ட்ரோல் செய்வதற்கு முன் யோசிங்கப்பா கொஞ்சம். யாரை பேசுகிறீர்கள்? ஒரு ராணுவ வீரரை போன்றுதான் மருத்துவரும். நாட்டுக்கு சேவை செய்பவர்கள். நான் ஒரு சித்த மருத்துவர். நீங்கள் டாக்டரையே இல்லை என்கிறார்கள். நான் படித்து வந்துள்ளேன் என்ன பேச வேண்டும் என்று தெரியும். மருத்துவர்களை விமர்சிப்பதால், அவர்களை தொந்தரவு செய்தால் தண்டிப்பதற்கான சட்டங்களும் உள்ளன. எங்கள் சித்த மருத்துவர்கள் சேர்ந்ததால் என்ன ஆகும் தெரியுமா?" என்று பேசியுள்ளார்.
முன்னதாக இவர் அள்ளிவிட்ட பொய்கள் குறித்து தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், "ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் மருத்துவ விதிகளின் படி தவறான கருத்தை பரப்பக் கூடாது.
அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இல்லை எனவும் எந்த இறைச்சியும் சாப்பிக் கூடாது என்று குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைபடுகிறதோ அது சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி அவர்கள் விருப்பம் படி சாப்பிடலாம். மேலும் ஷர்மிகா சொல்வது போன்ற எந்த ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இதுபோல பேசுகிறார்.ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்லவேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்றப்பட்டு சொல்லக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் மக்களிடம் தவறான கருத்து கூறிய சித்த மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!