Tamilnadu
வைகுண்ட ஏகாதசி: புகைப்படம் எடுக்கும்போது உயிரிழந்த போட்டோகிராபர்.. - 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீ ரங்கம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காண ஆண்களும், பெண்களும் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வின் போது கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை 'தி இந்து' ஆங்கில பத்திரிகையின் மூத்த போட்டோகிராபர் (புகைப்பட கலைஞர்) கே.வி.சீனிவாசன் (56) புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைதொடர்ந்து அவரை சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இன்று காலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கே.வி.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, தமிழ்நாடு பத்திரிகையாளர் குடும்ப நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ட்விட்டர் பக்கத்தில், “தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.சீனிவாசன் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த கே.வி.சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?