Tamilnadu
“சத்திரபதி சிவாஜி முதல் ராஜராஜ சோழன் ஆமை கதை வரை..” : அண்ணாமலையின் ‘புருடா’க்களை பட்டியலிட்ட இணையவாசிகள்!
"முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டியபட்டமிது!) புதிதாக தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அண்ணாமலை நடத்தி வரும் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தால், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.
இந்நிலையில் தற்போது தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றால்லாம் கதை விட்டு வந்த அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது, பில் எங்கே என பல்வேறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார் , 20000 புத்தகம் படித்துள்ளேன். 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் என கதையளந்த அண்ணாமலை தற்போது ரூ.345/- மெஷினை 10,000 ரூபாய் என பொய் சொல்லி அம்பலப்பட்டுள்ளார்.
குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் முக்கிய காரணமாக இருந்தது சமூகவலைத்தளங்கள்தான். அப்போது பாஜக பரப்பிய பொய்ச்செய்திகள் உண்மை என்றே மக்களால் நம்பப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சொன்னது அனைத்தும் பொய் என்பது தற்போது அனைத்து தரப்பினரையும் எட்டியுள்ளது.
அதிலும் தமிழ்நாட்டில் பாஜக சொல்லும் பொய்களை எப்போதுமே மக்கள் நம்பியது இல்லை. ஆனாலும், பாஜக தலைவர்கள் பொய் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை "காது கேளாதோருக்கு வழங்கப்படும் Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவு ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும், அதை பாஜக சார்பில் உங்களுக்கு வழங்குகிறோம்" என்று கூறினார். ஆனால் கொடுக்கப்பட்ட அந்த கருவியில் விலை வெறும் ரூ.345 எனவும் அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
ரூ.1,999 மதிப்பு கொண்ட அந்தக் கருவியை அமேசான் 83% தள்ளுபடி போக ரூ.345க்கு தற்போது விற்பனை செய்வதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதன்மூலம் பொய் சொல்வதையே மூலதனமாக கொண்ட பாஜக மீண்டும் ஒரு பொய்யை கூறிவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் அண்ணாமலையின் பொய்களை பலரும் பட்டியலிட்டு விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் அண்ணாமலை சமீபத்தில் பேசிய பொய்களை கீழே காண்போம்.
கட்சியில் சேர்ந்தவுடனே அண்ணாமலை வாய் தவறி அல்ல, தெரிந்தே உலறுகிறார். அதன்படி பத்திரிக்கையாளர் சந்திப்பில், முதலமைச்சரும், நாங்களும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள். ஆனால் முதலமைச்சருக்கு உண்டான மரியாதையைக் கொடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, 360 டிகிரி எதிராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார் அண்ணாமலை. ஆனால், பாகைமானியில் 0 டிகிரி என்பதும், 360 டிகிரியும் ஒரே கோணத்தை குறிப்பவை என்பது பள்ளிக்கூட சிறுவர்களுக்கு கூட தெரியும். ஆனால், இந்த சாதாரண கணக்குக்கூட தெரியாத அண்ணாமலை எப்படி IPS தேர்வானார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல் மற்றொரு பேட்டியில், சொந்த கட்சி பிரதமர் பெயரையே மறந்து பாராத பிரதமர் மகாத்மா காந்தி கதிர் ஆடை வாங்கச் சொல்லியிருக்கிறார் என்கிறார். அதுமட்டுமல்லாது வரலாற்று தகவலாவது தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், ராஜராஜ சோழன் ஆமை கழுத்துல கயிறு கட்டிட்டு கடலில் பயணம் செய்தார் வந்ததாக புருடா விடுகிறார்.
இட ஒதுக்கீட்டு பற்றி தெரியாமல் விவாதத்தில் பங்கேறு பேசுகிறார். அக்டோபர் 3, 1967ம் ஆண்டு சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு வந்த சத்ரபதி சிவாஜி என்றுகிறார். ஆனால் 1680 ஏப்ரலில் இறந்துவிட்டார் என்பதே உண்மை. இப்படி பல பொய்கள் உளறல்களை அடுக்கிக்கொண்டே போலாம்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!