Tamilnadu

தங்க முட்டை இடும் வாத்தை வெட்ட மனம் இல்லையா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு?.. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ‘ஆன்லைன் சூதாட்டம்‘ மூலம் அதிக தற்கொலைகள் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்பதாகக் கூறி, அ.தி.மு.க. அரசு. அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. ஆனால், உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டிக் காட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது.

இதையடுத்து, தி.மு.க. தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டு, பிறகு, அடுத்துக் கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு , கடந்த அக்டோபர்-28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

ஆளுநர் விளக்கம் கேட்டதையடுத்து, தமிழக அரசும் உரிய விளக்கத்தை அளித்தது. ஆனால் இதுநாள் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். இவரின் இந்த காலத்தாமத்தால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது.

இதனால், உடனே ஆளுநர் தடை மசோதாவிற்கு ஒப்புதல்கொடுக் வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களின் உயிர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கள்ளமவுனம் காத்து வருகிறார்.

மேலும் ஆன்லை நிறுவனங்கள் அன்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தடைபோட மறுப்பதன் பின்னணியில் இருப்பது யார் என ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கூறிய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, "ஆன்லைன் ரம்மி மூலம் வரக்கூடிய வருவாயில், வருமான வரியைக் கோடிக்கணக்கில் பெறுகிறது ஒன்றிய அரசு. மறுபக்கம் மாநில அரசுகளுக்கும் ஜி.எஸ்.டி-யின் கீழ் 28% வரி வசூலிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

இது மட்டுமில்லாமல், சட்டத்தின் மூலமாகத் தடையைக் கொண்டு வராமலிருப்பதற்கு ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றன. இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தடைபோட மறுப்பதன் பின்னணியில் இருப்பது யார்? என்பதை புரிந்து கொள்ளலாம். தங்க முட்டை இடும் வாத்தை யார்தான் வெட்டி உணவு சமைப்பார்கள்?" என விமர்சித்துள்ளார்.

Also Read: "எதிரிகள் எறிந்த ஆயுதத்தை ஒரே பதிலால் மொக்கை ஆயுதமாக்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்": சிலந்தி!