Tamilnadu
“அடிமைகளின் ஓலங்களும், சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றன” : TRB.ராஜா, ராஜீவ் காந்தி பதிலடி!
எடுத்தப்பணியை சிறப்பாக செய்துமுடிக்கும் ஆற்றல் கொண்ட உதயநிதி ஸ்டாலின், கழக பணி முதல் எம்.எல்.ஏ பணிகள் வரை சிறப்பாக செயலாற்றி தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் கழகப் பணியை அங்கீகரிக்கும் வகையில், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழகம் இவரை மீண்டும் இளைஞர் அணி செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது. அதேபோல் மிகச்சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேரை இளைஞர் அணி துணைச் செயலாளர்களாகப் பொறுப்புயர்வு வழங்கினார்.
அதேபோல் மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான இடங்களை நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு, அப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
இவரின் கழகப் பணி - மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருக்கிறார்கள். அவருக்கு ஒதுக்கப்படும் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வெல்வார் என்பதில் ஐயமில்லை.
ஆனால் உதயநிதிக்கு வழங்கப்பட்டும் அமைச்சர் பதவியை பொறுத்துக்கொள்ளாத பா.ஜ.க - அ.தி.மு.க கும்பல்கள் புகைச்சலை கொட்டி தீர்த்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி ராஜா மற்றும் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் முதல்வர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். வழக்கம் போல அரசியல் நரிகளான அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றன. அவர்கள் அப்படித்தான்.
நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அவரது திறமை மிகுந்த செயல்பாடுகளைத்தான். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரியக்கத்தின் இளைஞரணியைத் தலைமை தாங்கி சிறப்பாக செயல்படுபவர், அமைச்சராகும்போது அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுவது இயல்பு.
விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள். அவர்கள், friendly approach உடன் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு எப்போதும் down-to-earth ஆக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அவர்களின் கோரிக்கையின் தன்மையை உணர்ந்து, உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு மிகப் பொருத்தமானவர்.
முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை வரலாறு காணாத வகையில் மேம்படுத்தி இந்திய அளவிலும் உலக அளவிலும் சாதனைகள் படைத்து, பதக்கங்களை வெல்லும் வீரர் - வீராங்கனைகளை உருவாக்குவதில் புதிய முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட் அதற்கொரு simple sample. அதிலும் உதயநிதி ஸ்டாலின் பங்கு முக்கியமானது.
தொகுதிகள் தோறும் நவீன விளையாட்டரங்கம், சென்னைக்கு அருகே சர்வதேச தரத்திலான விளையாட்டு கிராமம், உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் என விளையாட்டுத்து துறையை அணுஅணுவாக கவனித்து வளர்த்து வருகிறார் முதல்வர்.
அவருக்கு உற்றதுணையாக உதயநிதி ஸ்டாலினைத் தந்திருக்கிறது கழகம். இது விளையாட்டுத் துறையின் பொற்காலம். விளையாட்டுத் துறை மேம்பட்டால் இளைஞர்களின் திறமை மேம்படும். வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநிலத்தின் திறனால் நாட்டிற்கே பெருமை சேரும்.
அதை நோக்கிய பெரும் பாய்ச்சலுக்குத் தமிழ்நாடு தயாராகிறது.விமர்சனங்கள் நொறுங்கும். சாதனைகள் பெருகும். இளைஞர்களே இது உங்களுக்கான ஆட்சி. காத்திருங்கள் பல புதிய முன்னெடுப்புகள் விரைவில்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் என்று அரசர்களை தங்களின் பெருமை, அடையாளம் என கொண்டாடும் இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை வாரிசு என்று வசைபாடி ஒதுக்க நினைப்பது ஒரு வித நவீன மனுதர்மமே!
குஜராத் முதவராகும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ கூட இல்லை மோடி! குறுக்கு வழியில் குஜராத் முதல்வராக வந்த மோடியை கொண்டாடுபவர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ உதயநிதி அமைச்சராவதை விமர்சனம் செய்வதை பார்த்தா வேடிக்கையா இருக்கு!" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !