Tamilnadu
கூடுதல் விலைக்கு மது விற்பனை.. 852 பணியாளர்கள் சஸ்பெண்ட்: அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி!
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்து உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்குத் துணை போன ஆயிரத்து 970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடமிருந்து ரூ. 4.61 கோடிக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாகப் பார் நடத்தியதாகக் கூறி 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் பார் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமாகப் பார் நடத்தி மதுபானம் அருந்த அனுமதித்த பார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!