Tamilnadu
TV பார்க்கும் போது காதலனுடன் சண்டை : ஆத்திரத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலி செய்த கொடூரம் !
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (30). இவர் வீட்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு இசை தயாரித்துக் கொடுக்கும் பணி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் சுவேதா என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே சூர்யா கொடைக்கானலில் காட்டேஜ் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே இசை தயாரித்து வந்த நிலையில், காதலி சுவேதா அவரை பார்ப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தநிலையில், சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சுவேதா காதலை முறித்துக்கொண்டு சென்னை திரும்பியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மூன்று மாதங்களுக்கு மேலாக சூர்யா கொடைக்கானலில் தங்கி வேலை செய்துள்ளார். இதனிடையே மீண்டும் கொடைக்கானல் வந்த சுவேதாவுக்கு காதல் ஏற்பட்டு சூர்யாவுடன் மீண்டும் பழகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி சூர்யாவுக்கு அடிபட்டுவிட்டதாக சுவேதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியுள்ளனர். சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளனர்.
போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சூர்யாவின் காதலியை விசாரித்ததில், சம்பவத்தன்று இருவரும் டி.வி பார்ப்பதில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது சூர்யாவுக்கும், சுவேதாவுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுவேதா தனது ஆண் நண்பர்களான மும்பையைச் சேர்ந்த கெளதம், திருநெல்வேலியைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கொடைக்கானல் ஆனந்தகிரி பரந்தாகசோழன், அகில்அகமது ஆகியோரை ஏற்கனவே கொடைக்கானல் வரவழைத்து சூர்யாவிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சுவேதாவின் நண்பர்கள் அருகில் இருந்த கட்டையை எடுத்து சூர்யாவை பலமாக தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுழந்த சூர்யா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது என கூறியுள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் சுவேத உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டி.வி பார்ப்பதில் தகராறு ஏற்பட்டு காதலனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!