Tamilnadu

25 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவர்.. 1 மணி நேரத்தில் மீட்ட தீயணைப்புத்துறைக்கு குவியும் பாராட்டு!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். முதியவரான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே இருந்த உரை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் வருகிறதே என அப்பகுதி மக்கள் எட்டிப்பார்த்தபோதுதான் சந்திரசேகர் கிணற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது. பிறகு உடனே போலியிருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 25 அடி ஆழகிணற்றில் கயிறு கட்டி இறங்கினர். இதில் ஒரு வீரர் கிணற்றில் இறங்கி முதியவரைப் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். கிணற்றில் விழுந்ததால் முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

பிறகு முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதையடுத்து கிணற்றில் விழுந்த முதியவரை ஒரு மணி நேரத்தில் உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு பொதுமக்களும், அவரது உறவினர்களும் நன்றி தெரிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.

Also Read: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வந்து விட்டது ஜோம்பி வைரஸ்: மனித குலத்துக்கு பேராபத்தா?