Tamilnadu
பல மணி நேரம் குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர்.. குளியறையில் காத்திருந்த அதிர்ச்சி -ஊட்டியில் சோகம் !
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற சலீம் - பிரிஜோத் பானு தம்பதியினர். செல்போன் கடை நடத்தி வரும் இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம், ராஜா வழக்கம்போல் வெளியில் சென்றுள்ளார். மேலும் பானு சமயலறையில் வேலை செய்து வந்துள்ளார்.
இதனால் குழந்தை தனியே விளையாடி கொண்டிருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்த பானு, தனது குழந்தையை காணவில்லை என்பதை அறிந்தார். பின்னர் படுக்கையறை, கட்டில் கீழ், வீட்டின் வெளியே என்று சுற்றிலும் தேடியுள்ளார். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கைவில்லை.
எனவே அக்கம்பக்கத்தினரிடம் தனது குழந்தையை காணவில்லை'; யாரேனும் கடத்தி சென்றாரோ என்று கூறி பயந்து அழுதுள்ளார். பின்னர் மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்க்கையில் குளியலறை கதவு திறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கே சென்று பார்த்த பானு, தனது குழந்தை வாளிக்குள் தலை குப்புற இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பதற்றத்தில் குழந்தையை தூக்கி பார்க்கையில் வாளிக்குள் இருந்த நீரில் அவர் மூச்சி திணறி இறந்துள்ளது தெரியவந்தது. குழந்தை இறப்பை தாங்க முடியாமல் பானு கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் வாளிக்குள் தலை குப்புற கவிழ்ந்து நீரில் மூச்சு திணறி இறந்துள்ளது நீலகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு பொருள் மீன் தொட்டியில் விழுந்ததால் அதை எடுக்கும் போது தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!