Tamilnadu
3 மாத Plan.. 3 நிமிடம் வேடிக்கை பார்த்ததால் மாட்டிய திருடர்கள்: சென்னை நகை கடை கொள்ளை சம்பவத்தில் திடுக்!
சென்னை நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட இந்திய திருடர்களை 3 மணி நேரத்தில் பிடித்த நிகழ்வில் தற்போது கொள்ளை சம்பவத்தை எப்படி நிகழபட்டது என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள 'புளூ ஸ்டோன்' என்ற தனியார் நகைக் கடை உள்ளது. இக்கடையின் பொறுப்பாளராக இருப்பவர் ஜகதீசன்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஜகதீசன் கைப்பேசிக்குக் கடையிலிருந்து எச்சரிக்கை ஒலி ஒலித்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அவர் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். பிறகு சேலையூர் போலிஸார் நகைக் கடைக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது, நகைக் கடை சுவற்றில் இருந்த பைப் லைன் மூலம் கடையின் மேல்தளம் வரை சென்று, அங்கிருந்த மின் தூக்கியின் இணைப்பு அறை வழியாக உள்ளே சென்று பல லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலிஸார் கடையிலிருந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை உடனே பிடிக்க அதிரடியாக போலிஸார் களமிறங்கினர்.
மேலும் நகைகளை கொள்ளையடித்த பின் அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் மேல் தளத்திலிருந்து சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை வெகு நேரமாகக் கொள்ளையன் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு அருகே இருக்கும் கட்டத்தில் குதித்துத் தப்பிச் சென்றது போலிஸாரி விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கொள்ளையன் ஒருவன் போலிஸாரின் விசாரணைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். பிறகு சிசிடிவி காட்சிகளைக் காண்டு கொள்ளையனை அடையாளம் கண்ட போலிஸார் உடனே அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவரும் அந்த கொள்ளையனும் ஒன்று தான் என்று தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதில் மூன்று பேர் ஈடுபட்டது தெரிந்தது.
இது குறித்து சோழிங்கநல்லூர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "இன்று காலையில் கெளரிவாக்கத்தில் ப்ளு ஸ்டோன் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக எங்களுக்கு 6 மணிக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து எங்கள் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சிசிடிவி காட்சிகள் உதவியோடு விரைவாகவே 8.30 மணியளவில் குற்றவாளியான ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவர் என மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடமிருந்து முதலில் சுமார் 1½ கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சுமார் 3 மாதமாக வாடகை வீட்டில் தங்கி அந்த நகை கடை அருகே இருந்த கடை ஒன்றில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது.
அதோடு கொள்ளையர்கள் லிப்ட் துவாரம் வழியாக கடைக்குள் சென்று கதவை உடைத்து திருடியுள்ளனர். 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கடையில் இருந்த நிலையில், லாக்கரில் இருந்த நகை தவிர்த்து மீதியிருந்த நகைகள் கொள்ளை போனது. திருடிய நகைகளை வீட்டில் வைத்து விட்டு கொள்ளையர்கள் வெளியில் வந்து சுற்றிதிரிந்துள்ளனர்' என்றார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?