Tamilnadu

குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு சென்ற மாணவி.. தகவலறிந்து கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட தி.மு.க நிர்வாகி !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் இருந்து சில மீட்டர் தூரத்தில் குடிசை அமைத்து தனது குடும்பத்தோடு வசித்து வருபவர் வசந்தி. பள்ளி படிப்பு முடித்த இவர் தனது தந்தை மற்றும் தாய்க்கு உதவியாக வேலை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தில் தனது இரு தங்கைகளை படிக்கவைத்துக்கொண்டு வருகிறார்.

அவரின் தந்தை,தாய் கூலி வேலை செய்து வருவதால் அவர்களுக்கு உதவியாக டோல்கேட்டில் வரும் கார்களில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து வருகிறார். பள்ளி படிப்பு முடிந்ததும் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்த அவர், அதன்பின்னர் வறுமை காரணமாக படிப்பை நிறுத்தியுள்ளார்.

தினமும் மாலை 5 மணிக்கு டோல்கேட்டு வியாபாரத்துக்கு செல்லும் இவர் இரவு 10 மணி வரை அங்கு வியாபாரம் செய்து வருகிறார். அதேபோல சில நேரங்களில் இரவு அதிக நேரமானாலும் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து அங்கேயே வியாபாரம் செய்து அந்த வருமானத்தை தனது குடும்பத்துக்கு செலவிடுகிறார்.

வசந்தி தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் அவருக்கு உதவமுன்வந்தனர். இந்த வீடீயோவை தொடர்ந்து வசந்தியை நேரில் அழைத்த செஞ்சி பேரூராட்சி தலைவரும், அமைச்சர் மஸ்தானின் மகனுமான முக்தியார் மனைவியின் கல்லூரி செலவை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்துள்ளார். அத்துடன் இந்த வருட கட்டணத்திற்காக 25,000/- ரூபாயையும் வழங்கியிருக்கிறார்.

Also Read: பாம்புதோஷம் கழிக்க ஜோதிடர் கூறிய யோசனை.. பாம்புமுன் நாக்கை நீட்டியவருக்கு இறுதியில் நேர்ந்த சோகம் !