Tamilnadu
தாமதமாக வந்து ரயிலில் ஏறிய பயணி.. கதவு திறக்காததால் 14 கி.மீ தொங்கியபடி சென்ற சோகம்! நெல்லையில் பரபரப்பு!
தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு வாராந்தர விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில் வழக்கம்போல திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியுள்ளது.
அப்போது அந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த சரவண அருணாச்சலம் என்பவர் ரயில் நிலையத்துக்கு தாமதமாக வந்துள்ளார். அவர் சரியாக ரயில் நிலையத்தின் உள்ளே செல்லும்போது ரயில் சற்று வேகமாக பயணிகத்தொடங்கியுள்ளது.
உடனே ரயிலை பிடிக்க அதன் பின்னாலே ஓடிச்சென்றவர் கடைசிப் பெட்டியை எட்டிப் பிடித்து அதன் வாசலில் ஏறியுள்ளார். அப்போதுதான் அந்த வாசலில் இருக்கும் கதவு பூட்டப்பட்டுள்ளது அவருக்கு தெரியவந்துள்ளது. அந்த தருணத்தில் ரயில் வேகம் எடுத்ததால் இறங்கமுடியாமல் ரயிலின் வாசலில் தொங்கிவந்துள்ளார்.
இதனை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி பராமரிப்புப் பணியாளர்களான பணியாற்றும் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோர் பார்த்து நிலைய அதிகாரியிடம் கூறியுள்ளனர். அடுத்து ரயில் கோவில்பட்டியில்தான் நிற்கும் என்பதால் அதற்கும் தொங்கிக்கொண்டு செல்லும் பயணிக்கு ஏதும் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் ரயிலை நிறுத்தும் படி ஓட்டுனருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரயில் நிலையத்தில் இருந்து ரயில் 14 கி.மீ தொலைவு சென்றுவிட்ட நிலையில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அங்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் பயணி சரவண அருணாசலத்தைக் கீழே இறக்கி, அறிவுரை கூறி அவர் முன்பதிவு செய்த இருக்கையில் அவரை அமரவைத்துள்ளனர். இந்த சம்பவம் ரயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!