Tamilnadu
2 ஆண்டுகள் போராட்டம். 6 மாதத்தில் மாணவி சிந்துவை நடக்க வைத்த அரசு: சொன்னதை செய்து காட்டிய முதல்வர்!
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி தேவி. இந்த தம்பதிக்கு சிந்து, சுந்தேரஸ்வரா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சக்தி இரு சக்கர வாகனத்தில் சென்று டீ விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் 12ம் வகுப்பு படித்து வரும் சிந்து படிப்புடன் சேர்த்து, விளையாட்டிலும் படு சுட்டி. இவர் வாலிபால் (கைப்பந்து) விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அருகிலுள்ள வீட்டின் மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில், மாணவி சிந்துவின் கால் எலும்புகள் முறிந்ததால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி சிந்து தொடர் மருத்துவச் சிகிச்சையிலிருந்து வருகிறார்.
இதையடுத்து கடந்த மே மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியதை அடுத்து, தன்னால் நடக்க இயலாத சூழலிலும் தன் நம்பிக்கையுடன் மாணவி சிந்து தேர்வு எழுதியுள்ளார். இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "படுத்த படுக்கையாகத் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற அரசு உதவும்" என தெரிவித்திருந்தார். இதையடுத்து மாணவி சிந்துவுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிந்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, 'அரசு அனைத்து உதவியும் செய்யும் ஒரு தந்தையாக நான் இருக்கிறேன்' என நம்பிக்கை கொடுத்தார். இதையடுத்து மாணவி சிந்து சிகிச்சைகள் முடிந்து முழுமையாகக் குணமடைந்து நடக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்சந்தித்து தனது மருத்துவச் சிகிச்சைக்கு உதவியமைக்காக மாணவி சிந்து நன்றி தெரிவித்துக் கொண்டார். 'சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் இந்த அரசு செய்து காட்டும்' என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதற்கு மாணவி சிந்து ஒரு எடுத்துக்காடாக அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!