Tamilnadu
“இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் ‘திராவிட மாடல்’ அரசு”: அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகரில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து 10 நாட்கள் நடத்தும் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
முன்னதாக சாத்தூர் அருகே வெம்பகோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு தொல்பொருள் அரங்கையும், தமிழ் அறிஞர்கள் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர்கள் சிலை அரங்கையும் திறந்து வைத்த அமைச்சர்கள், முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்து, புத்தக நன்கொடை அரங்கையும் திறந்து வைத்தனர்.
பின்னர் விழா மேடையில் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “தமிழர்களின் கலாச்சாரத்தையும் வாழ்ந்த நெறிமுறைகளையும் தற்போது உள்ள சந்ததிகள் தெரிய வேண்டுமென்றால் புத்தகத்தை படிக்க வேண்டும். அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பாரம்பரியமான தமிழ் ராஜாக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை புத்தகத்தின் வாயிலாக அறிய வேண்டும்” என புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் பொருட்காட்சி, வீட்டு உபயோக கண்காட்சி போன்றவற்றிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது போன்று, புத்தக கண்காட்சிக்கும் வர வேண்டும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் நினைத்து ஆணையிட்டதால் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சிக்கு விருதுநகர் புத்தக கண்காட்சி ஒரு முன்மாதிரியாக திகழும் என்றார். பல நூற்றாண்டுகளாக புத்தகத்திற்கு தொடர் வெற்றி கிடைத்து வருவதாகவும், தாயின் சேலையில் உள்ள வாசம் தான் நாம் படிக்கும் புத்தகத்திலும் வீசும்.
கலைஞர் ஆட்சியில் தான் பள்ளிகளில் புத்தக பூங்கொத்து திட்டம் கொண்டு வந்ததாகவும், தமிழ் எழுத்தாளரான கீ.ரா-விற்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ததை வைத்து எழுத்தாளர்களை நாம் மதிக்கும் அளவை தெரிந்து கொள்ளலாம். இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!