Tamilnadu
புனே செல்லவிருந்த பெண் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா. இவர் மங்களூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில்,நேற்று இரவு சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தார். அதன் பின்பு அவா், இன்று அதிகாலை சென்னையிலிருந்து புனே செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் செல்லவிருந்தார். இதனால் அவர் வெளியே எங்கும் செல்லாமல் விமான நிலையத்திலேயே அமர்ந்திருந்தார்.
பின்னர், புனே செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கான போா்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு பு பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காகத் தயாரானார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, விமான நிலைய ஊழியர்களுக்கு தெரிவித்தனர். உடனே ஊழியர்கள் விரைந்து வந்து, அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!