Tamilnadu
பிரியாணி கொடுக்கவில்லை என்று சண்டை.. மனைவி எரித்து கொலை.. இறுதியில் கணவருக்கும் நேர்ந்த சோகம் !
சென்னை அயனாவரம் தாகூர் நகரில் வசித்து வருபவர் கருணாகரன் (வயது 75). ஐ.சி.எப்.ல் கார்பெண்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது 65 வயது மனைவி பத்மாவதியுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் என 4 பிள்ளைகள் இருக்கும் நிலையில் அனைவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனியே வாழ்ந்து வரும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இருவருக்கும் மன நிலை சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனாலே பிள்ளைகள் தனி தனியாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று முதியவர் கருணாகரனுக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என்பது போல் இருந்துள்ளது. எனவே தன்னிடம் இருந்த பணத்தை வைத்து அவர் மட்டும் பிரியாணி சாப்பிட்டு வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த இவர், தான் வெளியில் பிரியாணி சாப்பிட்டு வந்துவிட்டதாகவும், தனக்கு சாப்பாடு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு கோபப்பட்ட மூதாட்டி பத்மாவதி, தனக்கு தராமல் பிரியாணி சாப்பிட்டு வந்ததற்காக தனது கணவனுடன் சண்டையிட்டுள்ளார். மேலும் அந்த சண்டையில் முன்பு நடந்தது எல்லாம் சொல்லிக்காட்டி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதியவர் கருணாகரன், தனது மனைவியிடம் பதில் சண்டையிட்டுள்ளார்.
இவர்களுக்குள் இருந்த வாக்குவாதம் முற்றிப்போக கடும் ஆத்திரமடைந்த கருணாகரன், தனது மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்துள்ளார். இதில் தீப்பிடித்து அலறி துடித்த மூதாட்டி தனது கணவனையும் கட்டியணைத்துள்ளார். இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தத்தை கேட்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
பின்னர் தீக்காயங்களுடன் கிடந்த அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, காவல்துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் 20% தீக்காயங்களோடு அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் கருணாகரனும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!