Tamilnadu
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது ? - முழு கால அட்டவணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.. விபரம் இதோ !
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. எனினும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது நடைபெறும் 2022 - 2023-ம் ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் சமூக அறிவியல் வரையிலான பாடத்திற்கான தேர்வு தேதி, இதோ :-
11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் அவரவர் பிரிவு பாடம் வரையிலான தேர்வு தேதி, இதோ :-
12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் அவரவர் பிரிவு பாடம் வரையிலான தேர்வு தேதி, இதோ :-
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!