Tamilnadu
“RSS பின்வாங்கி இருப்பது மகிழ்ச்சியே, ஏனென்றால், இது தமிழ்நாடு” : பா.ஜ.க கும்பலுக்கு கனிமொழி MP பதிலடி!
சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்ற, அன்பின் பாதை அறக்கட்டளை, KEH குழுமம் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு இணைந்து நடத்திய "எங்கள் மயிலாப்பூர்" பள்ளிகளுக்கான அறிவுசார் மற்றும் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர், "எங்கள் மயிலாப்பூர் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளது. சொல்லும் போது வரும் உணர்வு வேறு எங்கும் வராது. மிகப் பழமையான கோயில், தேவாலயம், மசூதி மயிலாப்பூரில் உள்ளது. இது திருஞான சம்பந்தர் பாடிய தளம்.
சிட்டி சென்டர், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் உள்ளன. பழமை புதுமை என எல்லாம் இருக்கும் ஒரு இடம் மயிலாப்பூர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வோன்று தான் இருக்கும். ஆனால் இங்கு தான் எல்லாம் இருக்கிறது.
இந்த காலத்தில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் திறமை இருக்கிறது. ஒருவருக்கு நடனம், பாட்டு, என பல்வேறு வகைகளில் திறமைகள் உள்ளது. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும்.
உலக புகழ்பெற்ற எத்தனையோ எழுத்தாளர்களின் முதல் பதிப்புகள் புறக்கணிக்கப்பட்டது தான். அவை தான் இன்று பலரால் விரும்பிப் படிக்கவும் படுகிறது. என் திறமை என் கனவு மீது நம்பிக்கை இருக்கிறது என்பதால் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டோம். இது தான் உட்சம் என்றும் எடுத்துக்கொள்ள கூடாது. மென்மேலும் வளர வேண்டும். தன்னம்பிக்கை, உங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்", என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் வேண்டுமென்றே ஆளும் கட்சிகளுக்கு எதிராக தொடர்ந்து மரபுகளை மீறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதையெல்லாம் சர்ச்சையாக மாற்ற முடியுமா அதையெல்லாம் கருத்து சொல்லக்கூடாது என்ற மனம் இருக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மதிக்காத வகையில், நியமிக்கப்பட்டிருக்க கூடிய ஆளுநர்கள் பேசி வருவது நிச்சயமாக மாநில உரிமைகளை மீறுவதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய பேரணியிலிருந்து பின் வாங்கி இருப்பது மகிழ்ச்சி தான். ஏனென்றால் இது தமிழ்நாடு” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?