Tamilnadu
அதிமுக ஆட்சியில் வெள்ளத்தில் மிதந்த பகுதிகளில் தற்போது தண்ணீர் தேங்கவில்லை.. புகைப்படம் வெளியிட்ட MLA !
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் நவம்பர்,டிசம்பர் மாதங்களில் மழை பெய்தாலே சென்னை மக்களுக்குப் பிரச்சனையாகவே இருந்து. குறிப்பாகச் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும். இதனால் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.
இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து சென்னை முழுவதும் முதற்கட்டமாக வடிகால் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்கள் கண்டறியும் பணிகளும் நடைபெற்றது.
பின்னர் சென்னையில் உள்ள அனைத்து வடிகால் வாய்களும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தூர்வாரப்பட்டது. அதேபோல் அனைத்து தெருக்களிலிருந்த கால்வாய்களும் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரில் சென்று இந்த பணிகளை ஆய்வு செய்தார். மேலும், அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிலையில், சென்னையில் நேற்றும் இன்றும் பெருமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் வருமோ என பொதுமக்கள் அஞ்சிய நிலையில், தண்ணீர் தேங்காமல் இருந்தது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகின.
அதன் ஒரு பகுதியாக ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ எழிலன் தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஆண்டு மழை நீர் தேங்கிய பகுதிகளில் இந்தாண்டு மழை நீர் தேங்கவில்லை என்பதை உணர்த்தும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். முதலமைச்சரின் அறிவுரைப்படி மக்கள் பிரநிதிகளும் செயல்பட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!