Tamilnadu
சென்னை சுரங்கபாதைகளில் CCTV.. வெள்ளநீர் தேங்குவதை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு.. அசத்தும் தமிழக அரசு !
சென்னையில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீரோ, வாகனமோ தேங்கி, தடுமாறி நிற்கிறதா என்பதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் இருக்கிறது. இதனால் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது வரை ஓயாது பெய்து கொண்டிருக்கிறது. இந்த கனமழை எதிரொலியால் நேற்று சாலையில் ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 4-5 மணி வரைக்கும் விடாமல் மழை பெய்த எதிரொலியால் சராசரியாக பல இடங்களில் 7-8 செமீ மழை பதிவாகியுள்ளது.
ஆனால் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தமிழக அரசால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பல்வேறு முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கவில்லை. நேற்று இரவு பெய்த கனமழையால் தேங்கிய வெள்ளநீரை இன்று கலைக்குள் வடிகால் பணியின் காரணமாக உடனடியாக நீக்கப்பட்டது.
கடந்த ஆண்டு போல் இந்தாண்டும் வெள்ள நீர் சாலையில் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 4-5 மாதங்களாக கட்டப்பட்டு வந்த இந்த பணிகளின் எதிரொலியால், தற்போது பெய்து வரும் கனமழை வெள்ளநீர் சாலையில் தேங்காமல் வடிந்துள்ளது.
தமிழக அரசின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீரில் போது வெள்ளம் தேங்கி நிற்கும். கடந்த ஆண்டு இதே போல் தி.நகர் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானர். இதனால் வெள்ளம் தேங்காமல் இருக்க, ஸ்மார்ட் திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. அதன்படி சாலைகளில், சிக்னலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளத போல், சுரங்கபாதைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதாவது, இந்தாண்டும் கடந்த ஆண்டு போன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது என்று சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர் போன்ற சுரங்கபாதைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் அங்கு வெள்ள பாதிப்பு இருக்கிறதா என்பது கண்காணித்து வரப்படுகிறது.
அதன்படி கேமராவின் மூலம் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்பதாக தெரிகிறதோ அங்கெல்லாம் மோட்டார் மூலம் அதிகாலையிலேயே தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் மூலம் சென்னையில் உள்ள தி நகர் சப் வே தொடங்கி "பாரம்பரியமாக" வெள்ளம் தேங்கும் 15 சப் வேக்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!