Tamilnadu
“மன்னிப்பு கேட்க முடியாது.. No issues to me”: பத்திரிக்கையாளர்களிடம் மீது மீண்டும் ஆணவமாக பேசிய அண்ணாமலை!
"முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்"" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டியபட்டமிது!) புதிதாக தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அண்ணாமலை நடத்தி வரும் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தால், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.
தனிடையே செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், செய்தியாளர்களை அவதூறாக பேசிவிட்டு அங்கிந்து நழுவி ஓடுவதையே அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில் சமீபத்தில் கூட சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், “100 ரூபாய் தறேன், 200 வாங்கிக்கொள்ளுங்கள்” என கிண்டலடித்து பேசினார்.
இதனால் அதிருப்தி அடைந்த பத்திரியாளர்கள் பலரும் கண்டித்தனர். மேலும், “தமிழகத்தில் ஒட்டுமொத்த பா.ஜ.க-வின் நிகழ்வுகளை புறக்கணிக்க முயற்சி மேற்கொள்ளும்” என தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்தும் அண்ணாமலை தனது போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை. கடந்த வாரம் கோவையில் நடந்த கார் வெடி விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை முந்திக்கொண்டு தானே புலனாய்வு புலி என்பதல் போல் அரசு சேகரிக்கும் ஆதாரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பதற்றத்தை உண்டாக்கி வருகிறார். இதனால் அண்ணாமலையிடன் என்.ஐ.ஏ விசாரணை நடத்தவேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது, குரங்குகள் போல் ஏன் தாவித்தாவி வருகிறீர்கள் என்றும் ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினர். அண்ணாமலையில் இத்தகைய பேச்சு கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அண்ணாமலைக்கு பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பத்திரிகையாளர்களிடம் மீண்டும் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த செயலால் அரசியல் தலைவருக்கான மரியாதையை அவர் இழந்துள்ளார். பத்திரிகையாளர்கள் சரியான பாடம் புகட்டுவோம். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது செய்தியாளர் அண்ணாமலையிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக, கோவை சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரித்து வரும் தமிழ்நாடு காவல்துறையை அண்ணாமலை தொடர்ந்து குறைகூறி வருவருவது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு பதில் சொல்லாமல் வேறு எதைஎதையோ பேசிவிட்டு நழுவிட்டார். பின்னர் செய்தியாளர்களை தான் மட்டும் மரியாதையாக நடத்துவதாக கூறினார்.
இதனைக்கேட்ட செய்தியாளர்கள் பின்னர் ஏன் செய்தியாளர்களை பார்த்து குரங்கு என்று கூறினீர்கள். அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்கும் படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு படபடப்பாகி ஆவசமாக பேச தொடங்கிய அண்ணாமலை, “குரங்கு என்பதற்கும் குரங்கு மாதிரி என்பதற்கும் வித்தியாசம் உண்டு. மன்னிப்பு கேட்க முடியாது.. நான் தவறு செய்யவில்லை..
மன்னிப்பு என்பது என் ரத்தத்தில் கிடையாது.. பத்திரிகையாளர்கள் என்னை புறக்கணிக்கலாம். விருப்பம் இருந்தால் செய்தியாளர் சந்திப்பில் இடம் பெறுங்கள். உங்களுக்கு வேறு அஜெண்டா என்றால் it's upto you . No issues to me. ” எனத் தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!