Tamilnadu

கோவை சம்பவத்தில் பால்வாடி தனமான அரசியல் செய்யும் அண்ணாமலை.. ராஜீவ் காந்தி கடும் தாக்கு!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசையும், மாநில உளவுத்துறையையும், தி.மு.க-வையும் விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராஜீவ் காந்தி, அண்ணாமலை போன்ற கோமாளி அரசியல்வாதிகள் ஒரு இக்கட்டான வழக்கில் தினந்தோறும் ஒரு அறிக்கை விட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை காவல் துறையை கலங்கம் படுத்துவது போல் உள்ளது.

கோவையை தனது வாக்கு வங்கியாக வைத்து கொள்ள எப்போதும் மக்களை பதற்றத்துடன் வைத்து கொள்ள அண்ணாமலை முயற்சிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். மேலும், கோவை மாநகரில் உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டாமல் இருப்பதாக தனது அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளது பொய். அடிப்படை ஆதாரமில்லாமல் அவர் பேசு இருக்கிறார். வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார்.

கோவை கார் வெடிப்பில் தமிழ்நாடு காவல்துறையின் துரித நடவடிக்கையால் தான் மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய உளவு துறையிடம் இருந்து எந்த அறிக்கையும் தமிழ்நாடு அரசுக்கு வரவில்லை.

ISIS தொடர்பு உள்ள மூபினை தேசிய புலனாய்வு முகமை ஏன் கண்காணிக்கவில்லை. ISIS போன்ற பன்னாட்டு தீவிரவாத இயக்கத்தை கண்காணிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு முகமைக்கு உள்ளது. ஒன்றிய உளவு துறை மூபினை கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் அவரது பெயர் அந்த அறிக்கையில் இல்லை இதற்கு அண்ணாமலை பதில் சொல்லியாக வேண்டும்.

பால்வாடி தனமான அரசியலை அண்ணாமலை செய்து வருகிறார். அண்ணாமலையின் செயல் அமைதியை கெடுக்கும் வகையில் உள்ளது, அவர் அமைதியாக இருந்தாலே தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது.

தி.மு.க மீது அண்ணாமலை வன்மத்துடன் குற்றச்சாட்டு வைக்கிறார். கொள்கை ரீதியாக தி.மு.கவை வீழ்த்த முடியாது என்பதால், கண்ணுக்கு தெரியாத சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

கர்நாடகவிலிருந்து கோவைக்கு வரும் தொழில் நிறுவனங்களை தடுக்கவே அண்ணாமலை கோவையை பதட்டமாக வைத்திருக்க முயல்கிறார். அரசியலில் அனுபவம் இல்லாத அண்ணாமலை பா.ஜ.க தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர். ந்த கட்சியின் மாணவர் அணிக்கு வேண்டும் என்றால் அவர் தலைவராக இருக்கலாம். முதலில் அவர் கட்சியில் உள்ள பிரச்சனைகளை அவர் சரி செய்யட்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "ஒத்த ஓட்டு ஓட்டை வாய்க்குச் சொன்னாலும் புரிவதில்லை": அண்ணாமலைக்கு பதிலடி தந்த அமைச்சர் செந்தில் பாலாஜி!