Tamilnadu
பேருந்து ஓட்டுநர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.. என்னென்ன செய்யக்கூடாது? பட்டியல் இதோ !
வாகன ஓட்டிகளுக்கு அண்மையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு, தற்போது பேருந்து ஓட்டுநர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து போக்குவரத்துக் கழகம் சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் 3000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தற்போது போக்குவரத்துக்கழகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்து சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றரிக்கையில் ஓட்டுநர்கள் பணியின்போதும், பணிமனையில் இருக்கும்போதும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது பின்வருமாறு :
>> பணிமனை உள்ளே பணி செய்யும் ஊழியர்கள் புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் நிலையில் இருக்க கூடாது. மீறி இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
>> தொழில்நுட்ப பணிகளுக்காக பேருந்துகள் பணிமனைக்குள் இயக்கிடும்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தை இயக்கக் கூடாது
>> பேருந்திற்குள் welding பணி செய்திடும் போது கட்டாயம் battery wire துண்டிக்கப்பட வேண்டும்.
>> பணிமனைக்கு உள்ளே பேருந்துகளை 5 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
>> பூனை, நாய் போன்ற விலங்குகள் அடிபட்டு இறக்கலாம் என்பதால் அவற்றை பேருந்து பணிமனைக்குள் அனுமதிக்கக்கூடாது
>> பேருந்து பணிமனைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தவொரு பொருளையும் பாதுகாப்பான முறையில் அகற்றவேண்டும்
>> ஓட்டுநர்கள் பணியின்போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
>> இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பான உடை அணிந்து கையாள வேண்டும்
>> பணியின்போது பணியாளர்கள் வெளியே செல்ல நேரிட்டால், உரிய மேற்பார்வையாளரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்
- உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகள் போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இது போன்ற உத்தரவை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.
Also Read
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!