Tamilnadu
தீபஒளி விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் சிரமமின்றி பயணித்த பயணிகள்..தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு
தீபஒளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அப்படி சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக அரசு சார்பில் தேவைக்கு ஏற்றப்படி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த நிலையில், இந்தாண்டி தீபஒளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. முன் திடமிடலுடன் அதிக எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக பயணித்ததாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் சிரமமன்றி சொந்த ஊர் செல்வதற்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் விவகாரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தியதோடு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். முதலமைச்சரின் இந்த ஆலோசனை படி போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் செயல்பாட்டுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபஒளியை பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 4 நாட்களில் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே தீபஒளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 6,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் அடுத்த 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை திரும்பும் பொதுமக்கள் சிரமமின்றி வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பான நடவடிக்கைக்கு பொதுமக்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!