Tamilnadu
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. 4 காவலர்கள் சஸ்பெண்ட் : நடவடிக்கை எடுக்க துவங்கிய தமிழ்நாடு அரசு!
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விரிவான விசாரணை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
பின்னர், இந்த வாரம் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தூப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்யவில்லை. காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் போராட்டக்காரர்களைப் பார்த்த சுட்டுள்ளார். அவர் ஆட்சியர் அலுவலகம், 3 ஆம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் ஆகிய நான்கு இடங்களில் சுட்டுள்ளார். இவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தின் தொடக்க முதலே அப்போதைய ஆட்சியர் வெங்கடேஷ் அலட்சியத்துடனே இருந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு டு சம்பவம் தொடர்பாக 17 காவல்துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சர்கார், எஸ்.பி பி.மகேந்திரன், டி.எஸ்.பி லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ, தலைமைக் காவலர் ஒருவர், 7 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த விசாரணை அறிக்கையில் தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை, காவலர்கள் சங்கர், சதீஷ் சுடலைக்கண்ணு ஆகிய 4 காவலர்களை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். அதேபோல் சதீஷ் மதுரை மாநகர் நுண்ணறிவுப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!