Tamilnadu
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாங்களா? உண்மையில் மருத்துவமனையில் நடந்தது என்ன?- ரகசியத்தை உடைத்த விசாரணை அறிக்கை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என பலரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பெற்றது.
இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆணையத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுமக்களையும், அ.தி.மு.க தொண்டர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது வெளிவந்த பல்வேறு வதந்திகளுக்கு இந்த அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும், ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசன், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய், நாள்பட்ட மூச்சுக்குமாய் அழற்சி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
ஆனால், அப்போலோவில்சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவிற்கு கட்டுப்பாடு இல்லாமல் உணவு வழங்கப்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை மேலும் மோசமாகி உள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிகிச்கையில் இருந்தபோது ஜெயலலிதாவிற்கு, இட்லி, தயிர்சாதம், வெண்பொங்கல் ஓட்ஸ், தக்காளி சாதம், சீத்தாப்பழம் திராட்சை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டுள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!