Tamilnadu
வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி.. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியை கைது செய்த போலிஸ்!
திருச்சி பாலக்கரை தெற்கு கல்லுக்காகத் தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன் ( 25). பி.இ. முடித்துள்ள வேலை தேடி வந்துள்ளார். மேலும் தமிழ்நாடு காகித ஆலையில் வேலைக்கு விண்ணப்பித்து அதற்கான தேர்வும் எழுதியுள்ளார்.
அப்போது, அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த சிவராஜ், செந்தில் ஆகிய இருவர் சுரேந்திரனுக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அ.தி.மு.க ஆட்சிதான் நடக்கிறது நாங்கள் வேலை வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர்.
மேலும் ரூ. 12 லட்சம் பணம் வரை பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் சுரேந்திரனும் ரூ.12 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளனர்.
ஆனால் அது போலியான பணி நியமன ஆணை என அறிந்த சுரேந்திரன் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் பணத்தைத் திரும்பத்தர மறுத்து சுரேந்திரனை மிரட்டியுள்ளனர். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக சிவராஜ், செந்தில் ஆகிய இரண்டு பேர் மீது காவல்நிலையத்தில் சுரேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள செந்திலை போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் இருவரும் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!