Tamilnadu

100 இளம்பெண்களின் ஆபாச வீடியோ: குவைத்தில் தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கைது - ஏர்போர்ட்டில் அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரி தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி என்ற சுஜி. இவர் சென்னையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததுடன் அவரது புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல் காதலிப்பதாக கூறி பல பெண்களை நம்பவைத்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொடர்பு வைத்துள்ளார். அதோடு பெண்களுக்குத் தெரியாமலேயே வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அப்படி மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த வாரம் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்சியாக அவன் மீது புகார் கொடுத்து வருகின்றனர். இவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சி.பிசி.ஐ.டி போலிஸ் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையில், சமீபத்தில் காசிக்கு உதவியாக இருந்த இரண்டு பேரில் முக்கிய குற்றவாளியான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ என்பவரை போலிஸார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். மற்றொரு கூட்டாளியான கனகப்பபுரத்தை சேர்ந்த கௌதம் குவைத் சென்று விட்டதால் அவர் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி போலிஸார் லேப்டாப்பை யார் அழித்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், காசியின் தந்தையான தங்கபாண்டியன் இந்த செயலை செய்திருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் காசியின் அப்பா தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ளார். வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கை விசாரணை செய்யும் சி.பி.சி.ஐ.டி போலிஸார் காசியின் அப்பா தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அறிக்கை தாக்கல் செய்தனர் . அந்த அறிக்கையில் அதிர்ச்சியான சம்பவங்கள் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி போலிஸார் காசியின் வீட்டில் இருந்து ஆப்பிள் மொபைல் போனும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் தடையவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது முதல் குற்றவாளியான காசி 100 மேற்பட்ட மாணவிகளை ஆசை வார்த்தை கூறியும் மிரட்டியும் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு மற்றும் அரை நிர்வாண படங்கள் வீடியோ இருந்ததாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்க பாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் குவைத்தில் தலைமறைவாக இருந்த கௌதம் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குவைத்தில் தங்கியிருந்த கௌதம் நேற்று குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் சி.பி.சி.ஐ.டி போலிஸார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குவைத்தில் இருந்து வந்த கௌதமை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு கொண்டு வந்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: “பெண்களை மிரட்டும் காசியின் ஆடியோ - தற்போது வெளியானதன் பின்னணி என்ன?” : போலிஸார் தீவிர விசாரணை!