Tamilnadu
“இந்து கடைகளில் பொருட்களை வாங்குங்க என வெறுப்பு பிரச்சாரம்”: இந்து முன்னணி நிர்வாகி கைது - போலிஸ் அதிரடி!
ஒவ்வொரு ஆண்டும் திபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்வின் போது, தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள இந்து முன்னணி போன்ற ரப்பர் ஸ்டாப் கட்சியினர் அவ்வபோது சில இடங்களில் இருக்கின்ற பிரச்சனைகளை தூண்டிவிட்டு மதமோதல்களை ஏற்படுத்த நினைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தீபாவளி பண்டிக்கையின் போது, வழக்கம் போது துண்டு பிரசுரம் வழங்கி மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வரும் இந்து முன்னணி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்களே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் விநியோகித்து மதக்கலவரங்களை தூண்டிய கரூர் இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் சக்தி. இவர் கடந்த சில தினங்களாக துண்டு பிரசுரம் ஒன்றை வியாபாரிகள் பொதுமக்களிடம் விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. அதில், நலிவுற்ற நிலையிலிருக்கும் இந்து வியாபாரிகளை காப்பாற்ற, வரும் தீபாவளி பண்டிகைக்கு பொருட்களை இந்து கடைகளிலேயே வாங்குங்கள் என அந்த நோட்டீசில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இந்த துண்டு பிரசுரத்தை பொதுமக்களை விநியோகம் செய்தது மட்டுமல்லாது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலிஸார் வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தனர்.
சக்தியை கைது செய்யப்பட்டுள்ள குறித்து அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளியணை காவல் நிலையத்தில் கூடினர். அப்போது அவர்கள் காவல் துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
கைது செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சக்தியை போலிஸார் நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அங்கு நின்றிருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த வெற்றி என்பவர் போலிஸாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரையும் போலிஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!