Tamilnadu

"IPL-ல் பெங்களூரு அணி உன்னைப்போல வேஸ்ட்" - ஆத்திரத்தில் நெருங்கிய நண்பனை கொலை செய்த இளைஞர் !

அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தர்மராஜ். இதில் தர்மராஜிக்கு பிறப்பிலிருந்து பேச்சாற்றல் குறைபாடு இருந்துள்ளது. சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களான இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

பிரபலமான ஐபிஎல் தொடரில் தர்மராஜ் பெங்களூர் அணியின் ஆதரவாளராகவும், விக்னேஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாளராகவும் இருந்துள்ளனர். ஐபிஎல் போட்டி நடக்கும்போது யார் அணி தோல்வி அடைகிறதோ அவர் மதுபானம் வாங்கி பார்ட்டி வைக்கவேண்டும் என இவர்கள் இருவருக்கும் ஒரு ஒப்பந்தமும் இருந்துள்ளது.

விக்னேஷ்

சில மாதங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடர் நடைபெற்றபோது அதில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதியுள்ளது. அதில் தர்மராஜ் ஆதரித்த பெங்களூரு அணி தோல்வியுற்றது. அப்போது தங்கள் ஒப்பந்தபடி தர்மராஜ் விக்னேஷ்க்கு மதுபானம் வாங்கி பார்ட்டி வைத்துள்ளார். அப்போது பெங்களூரு அணி தொடர்ந்து தோல்வி அடைவதை குறிப்பிட்டு உன்ன மாதிரியேதான்டா பெங்களூர் அணியும் எப்போதுமே அவர்கள் கப் அடிக்க முடியாது என தர்மராஜின் பேச்சு குறைபாடை வைத்து விமர்சித்துள்ளார். இது தர்மராஜின் மனதில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தர்மராஜ் விக்னேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுபானம் குடிக்க வருமாறு கூறியுள்ளார். அதன்படி அதே பகுதியில் உள்ள சிப்காட் பஞ்சு மில் தொழிற்சாலை அருகே உள்ள திறந்தவெளியில் அமர்ந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

தர்மராஜ்

அப்போது பேச்சு கிரிக்கெட் தொடர்பாக வந்துள்ளது. விக்னேஷ் வழக்கம்போல எப்போதுமே மும்பை தாண்டா வெயிட்டு. உன்ன மாதிரியே உன்னோட பெங்களூரு அணியும் என தர்மராஜை கிண்டல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து விக்னேஷின் தலையில் அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த விக்னேஷை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து தனது வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார்.

பஞ்சு மில் அருகே சடலம் கிடப்பதை அறிந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் ஊரில் இது தொடர்பாக கூறியுள்ளனர். அப்போது கிராமமக்கள் வந்து சடலத்தை பார்க்க அவர்களோடு தர்மராஜூம் வந்து சடலத்தை பார்த்து பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் விக்னேஷின் தொலைபேசி அழைப்பை வைத்து சோதனை செய்ததில் கடைசியாக அவரிடம் பேசிய தர்மராஜை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் மேற்கூறிய சம்பவம் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: எலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுனு நிரூபிச்சிட்டலே.. 11 பேனாக்களின் மேல் பிட் எழுதி சென்ற கில்லாடி மாணவன்!