Tamilnadu

பெண்களே உஷார்.. சமூகவலைத்தளத்தில் அழகிய ஆண்கள் புகைப்படத்தை வைத்து மோசடி.. சைபர் போலிஸில் சிக்கிய ஆசாமி !

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பரமசிவம். சமூகவலைத்தளங்களில் அதிகம் ஈடுபாடு கொண்ட இவர் யோ-யோ (YOYO), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மூலம் பெண்களிடம் நண்பராக அறிமுகமாகி பழகி வந்துள்ளது.

இதற்காக அழகிய ஆண்களின் புகைப்படத்தை முகப்புபக்கத்தில் (Profile pictur ) வைத்து, அதன் மூலம் பெண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளது. புகைப்படத்தை பார்த்து நம்பி பேசி பழகும் பெண்களிடம் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்றுள்ளார்.

பின்னர் இதையே வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ள அந்த நபர் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று கோவையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணையும் இவர் மிரட்டிவந்துள்ளார்.

ஒருகட்டம் வரை பொறுத்த அந்த பெண் அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்படி பெண்களுக்கு துன்புறுத்தல் கொடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிஸார் பரமசிவத்தை தேடி வந்தனர். அதைத் தொடர்ந்து தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து அவரை கைது செய்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

Also Read: 15 நிமிட பயணத்துக்கு 32.39 லட்சம் பில்..UBER செயலால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. இறுதியில் வெளிவந்த உண்மை !