Tamilnadu
“சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்திற்கு தயார்”: மேடையில் அடித்து சொன்ன ப.சிதம்பரம் - நெகிழ்ந்த திருமாவளவன் !
கோவை மாவட்டம் சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நிமிர்வு கலையகம் சார்பில் பறையிசை நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். வி.சி.க-வினர் சார்பில், திருமாவளவனுக்கு அன்பளிப்பாக தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “போராடி போராடி அனைத்து தடைகளையும் உடைத்து நாடாளுமன்றத்தில் அரியாசானம் போட்டு அமர்ந்துள்ளார். நூற்றாண்டு காலம் திருமா வாழ வாழ்த்துகிறேன். வி.சி.க கட்சியின் தொண்டர்களுக்கான கோரிக்கை நான் சொல்வது திருமாவின் கொள்கைகளை கடைசி வரை பின்பற்ற வேண்டும்.
75 ஆண்டு காலம் சுதந்திரம் தினம் கொண்டாடுகிறோம். ஆனா, முழுமையாக 130 கோடி மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும் எழுதவும், போராடவும் சுதந்திரம் இல்லை. உணவு, இருப்பிடம் போன்றவையிலும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினர் இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கருப்பின மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
நம்முடைய நாட்டில் என்னுடைய வாழ்நாள் பிறகு இந்த போராட்டம் இருக்கும். இந்தியா முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதை இந்த மேடையில் தவிர்க்க முடியாது. மனுஸ்மிருதி எதிர்பதாக அம்பேத்கர் அடித்து சொன்னார். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலக அரங்கிலும் உடைத்து சொன்னவர் அம்பேத்கர். இந்தியாவில் இருக்க கூடிய இந்து மதம் பல மாடி கட்டிடம். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னோரு மாடிக்கு போக முடியாது. இதுபோன்ற வேறுபாடு எந்த மதத்திலும் கிடையாது.
இந்தியாவில் இருக்கும் மத பேதங்கள் எந்த நாட்டிலும் இல்லை. இதை உடைத்து எரிய வேண்டிதான் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் போராடினார். சனதானத்தை ஆதரிப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும். அவர்கள் நமக்கான சவால். மகாத்மா காந்தி சனாதனத்தை பேசுனதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதை அம்பேத்கரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மனுஸ்மிருதி பற்றிய விவாதம் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அண்ணாமலைக்கும், திமுக இராசாவிற்கும் இடையே நடக்கும் விவாதம் மட்டும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் என்றார். கடந்த செப்டம்பர் 13ம்தேதி பெரியார் உணவகத்தை எப்படி திறக்கலாம் என கலவரத்தை நடத்தியுள்ளனர். இளைஞர்கள் பலர் காவி கொடியை தூக்கிகொண்டு செல்வது அறிந்தேன்.
உணவகத்தை அடித்து நொறுக்கியதை பார்த்து வேதனை அடைந்தேன். சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும் இளைஞர்கள் பார்த்து பரிதாபம் படுகிறேன். இந்த மண் திராவிடமும், தேசியமும் கலந்த மண் இது. ஆதிக்க உணர்வுகளையும், சக்திகளையும் அழிக்க போராட வேண்டும்.
காந்தியை மதிக்கிறேன், ஆனால் சனாதன கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏற்றம் தாழ்வு கடுமையாக எதிர்க்கிறேன். சாதி ஒழிய வேண்டும். தடையாகவும், சுவராகவும் சாதி உள்ளது. சாதி ஒழிந்தால் தான் சானாதனம் ஒழிக்க முடியும். சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமாவின் தலைமையில் செல்ல தயார்” என உரை முடித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!