Tamilnadu
ராமராஜ்யத்தின் டிரைலரே மோசமானதாக இருந்தால், திரைப்படம் எவ்வளவு கொடுமையாக இருக்கும் - சுப.வீரபாண்டியன் !
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பாஜக மற்றும் ஹிந்துத்துவாவின் செயல்பாடு குறித்து ராமராஜ்யத்தின் "டிரைலர்" ஓடுகிறதோ? என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அண்மையில் குஜராத்தில் நடைபெற்றுள்ள ஒரு நிகழ்வு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. தசரா விழாவின் போது சிலர் கற்களை எறிந்து கலவரம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு. உடனடியாக அந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களைச் சிலர் பிடித்துக் கம்பத்தில் கட்டி வைக்கின்றனர். பிறகு பொதுமக்கள் முன்னிலையில் அந்த இளைஞர்களைக் கடுமையாகத் தடி கொண்டு தாக்குகின்றனர். இந்தக் காணொளிக் காட்சி இப்போது நாடெங்கும் விரைந்து பரவிக் கொண்டிருக்கிறது.
விசாரணையின் போது அந்த இளைஞர்கள் இஸ்லாமியர்கள் என்பதும், தாக்கியவர்கள் காவல்துறையினரும், ஒரு மதவெறி இயக்கத்தினரும் என்பதும் தெரிய வருகிறது. இதுவரை இந்தியாவில் இப்படி நடந்தது இல்லை. அவர்கள் கலவரம் செய்திருந்தாலும் அதை விசாரித்து நீதிமன்றத்தில்தானே அவர்களை கொண்டு போய் நிறுத்தியிருக்க வேண்டும்? தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்குத்தானே உள்ளது?
எந்த விசாரணையும் இல்லை, எந்த நீதிமன்றமும் இல்லை, தெருவில் மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்படுகிறது என்றால், இது என்ன நியாயம்? நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இதுதான் ராமராஜ்யமா என்று கேட்கத் தோன்றுகிறது.
இப்படி ஒரு காட்டு தர்பாரை நோக்கி நாட்டில் நிர்வாகம் சென்று கொண்டிருப்பது மிகுந்த வேதனை தருவதாக இருக்கிறது. இன்று குஜராத் நாளை எந்த மாநிலமாகவும் இருக்கலாம். தமிழ்நாட்டிலும் கூட ஓர் அதிர்ச்சியான செயல் நடைபெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முருகன் என்னும் ஒரு காவலர் தன் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் மேல் அதிகாரிகளின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை என்றும், முன் அனுமதி இல்லாமல் அடிக்கடி விடுமுறையில் சென்று விடுகிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு. அதனால் அவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனை எதிர்த்துத்தான் அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, கர்மா அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாகக் கூறியுள்ளார் சஞ்சார கர்மா,பிராப்த கர்மா என இரண்டு விதமான கர்மாக்கள் உள்ளன என்றும், பிராப்த கர்மாவின் அடிப்படையில் அவர் ஏற்கனவே தண்டனை பெற்றுவிட்டார் என்றும் கூறி அவருடைய இட மாற்றத்தை நீதிபதி ரத்து செய்துள்ளார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது என்று கண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் மத வெறியர்கள், காவல்துறை என்னும் பெயரில் தண்டனை வழங்குவதும், கர்மாவின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்குவதும் நாட்டின் சரிவை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.ராம ராஜ்யத்தின் டிரைலரே இவ்வளவு மோசமானதாக இருந்தால், திரைப்படம் எவ்வளவு வன்கொடுமை உடையதாக இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!