Tamilnadu

இப்படித்தான் நான் ஏமாந்தேன்.. -1 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்து விவரித்த நடிகர் போண்டாமணி !

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார்.

மேலும் நடிகர் போண்டாமணி உடல்நிலை குறித்து சக நடிகர் பெஞ்சமின் பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து போண்டாமணிக்கு பலரும் பண உதவி செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடிகர் போண்டாமணிக்கு உதவுவதுபோல் நடித்து ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் ரூ. 1 லட்சம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து இது தொடர்பாக போண்டாமணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜேஷ் பிரித்தீவை கைது செய்தனர். மேலும் ஏ.டி.எம் கார்டில் இருந்து எடுத்த பணத்தில் புதிதாக நகை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், நடந்த இந்த சம்பவம் குறித்து நடிகர் போண்டாமணி விளக்கமளித்துள்ளார். அதில், யாரென்றே தெரியாத நபர் ஒருவர் தன்னை போலிஸ் என்று கூறி தான் மருத்துவமனையில் இருந்தபோது,ராஜேஷ் பிரித்தீவ் நட்பாகப் பழகி அவருக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றபோதும் கூடவே வந்துள்ளார்.

பின்னர் வரவு, செலவு கணக்கு பார்க்கணும், ஆனால் அதை எப்படிப் பார்ப்பது என்று தெரியவில்லை என என் மனைவி சொன்னபோது ஏடிஎம் கார்டிலே வங்கி கணக்கு விவரங்களை எடுக்கலாம். நான் எடுக்கிறேன் என்று எனது மனைவியும் ஏடிஎம் கார்டை வாங்கி சென்றுள்ளார்.

பிறகு சில மணி நேரத்தில் ஏ.டி.எம் கார்டில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கார்டை பிளாக் செய்துள்ளார். மக்கள் திருட்டு விஷயத்துல ஜாக்கிரதையாக இருக்கணும்னு திருடுற மாதிரியெல்லாம் நான் படத்தில் நடித்துள்ளேன். ஆனால் நானே ஏமாந்துட்டேன் என்று கூறியுள்ளார்.

Also Read: பிரபல நடிகையை ஷட்டரை மூடி கடைக்குள் அடைத்துவைத்த ஷோரூம் ஊழியர்கள்.. பயத்தில் அழுததாக நடிகை பேட்டி !