Tamilnadu
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மகன் தற்கொலை.. சோகத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு!
சென்னை அடுத்த குன்றத்தூர், பழந்தண்டலம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (40). இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். மேலும் நவீன்குமார் செல்போனில் அதிகமாக கேம் விளையாடி வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் கேம் விளையாடிய மகனைக் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நவீன் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை அறையில் சென்று பார்த்த போது நவீன்குமார் தற்கொலை செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவரது உறவினர்கள் நவீன்குமார் உடலை மீட்டுள்ளனர். அப்போது, 'தன்னால் தனது மகன் இறந்து விட்டான்' என கத்திக் கொண்டே அறைக்கு ஓடிய சுந்தர் கத்தியால் தனது கையை அறுத்து கொண்டு அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துக் குன்றத்தூர் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை, மகன் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தையும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!