Tamilnadu

800 கிராம் கஞ்சா வைத்திருந்த அ.தி.மு.க நிர்வாகி.. போலிஸார் ரோந்து பணியின் போது சிக்கியது எப்படி?

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். அ.தி.மு.க நிர்வாகியான இவர் கருப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் சோழவந்தான் காவல் நிலையத்தில் உள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு கருப்பட்டி பகுதியில் சோழவந்தான் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனத்தில் வந்த செல்வகுமாரை நிறுத்தி போலிஸார் சோதனை செய்தனர்.

அப்போது, அவரிடம் 800 கிராம் கஞ்சா இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கூட்டுறவு சங்க தலைவரே கஞ்சா வைத்திருந்தது கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் இரும்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக பா.ஜ.க, அ.தி.மு.க, இந்து முன்னணியினர் கஞ்சா வழக்கில் கைதாகி வருவது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Also Read: வீட்டிற்குச் செல்லும்போது சாலையோர கடையில் மாம்பழம் திருடிய கேரள போலிஸ்: காட்டிக் கொடுத்த CCTV!