Tamilnadu
ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய்.. கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட காடம்பாறை அணை பற்றி தெரியுமா?
கரிகாலன் கட்டிய கல்லணை தெரியும். 1967 தொடங்கி, கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட காடம்பாறை அணை பற்றி தெரியுமா?
காடம்பாறை குகை ஒரு செயற்கை குகை.
திமுக உருவாக்கிய ஆரம்பகால திட்டங்களில் இதுவும் ஒன்று.
அதன் வரலாறு இதோ:
வால்பாறை உச்சியில் உள்ள "நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால். ஆனால் இதனால் தமிழகத்திற்கு யாதொரு பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான major source.
அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார். 20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.
அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.
இந்தத் தண்ணீர் மலைக்குகையை விட்டு வெளியேறிய பின்னர் அதே பாதையில் "நீர் மின்சாரம்" உற்பத்தி செய்யப் படுகிறது. அதுதான் "காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" ஆகும். இதுவும் தி.மு.க தான் திட்டமிட்டு நிறைவேற்றியது. பின்னர் சோலையார் அணையிலிருந்து மலைப் பகுதியில் திறந்த வெளிக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஆழியாறு அணையை சென்றடைகிறது. இதன்மூலம் தான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகள் பாசன வசதி பெற்றன. இது வரலாறு.
தி.மு.க-வினருக்கே இது புதிதாகத் தோன்றலாம். பதிவில் சொன்னபடி இதுதான் உண்மை. கலைஞரின் சாதனைகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.
நன்றி
பதிவர் - Thavasiandi Kumar/ Via Pugalendhi Dhanaraj
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?