Tamilnadu
கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேர்.. குளித்து கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்-தஞ்சையில் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு சுற்றலா பயணிகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடியில் இருந்து 40 பேர் நேற்று இரவு ஒரு பேருந்தில் புறப்பட்டனர். பின்னர் அவர்கள் இன்று காலை வந்தடைந்தனர்.
அங்கே வந்தவர்களில் சிலர் அருகில் இருக்கும் கொள்ளிடம் ஆற்றிற்கு குளிக்க சென்றனர். அப்போது அதில் திடீரென்று நீர் வரத்து காரணமாக 6 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மயமானார்கள். இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், உடனடியாக தங்களுடன் வந்த சக உறவினர்களுக்கு கூறினர். பின்னர் அவர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் வந்த காவல்துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரில் இரண்டு பேரை சடலமாக மீட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் மகன்கள் சார்லஸ் மற்றும் பிருத்திவிராஜ் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மற்ற 4 போரையும் மீட்பு படையினர் தீவிரமாக தடி வருகின்றனர். ஆனால் அவர்கள் தேடும் பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால் படகு மூலம் தேடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து கோயிலுக்கு வந்தவர்களில் 6 பேரை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, அதில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!