Tamilnadu
அதிவேகமாக வாகனம் ஓட்டிய வழக்கு..பெங்களூருக்கு தப்ப முயன்ற TTF வாசனை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிஸ் !
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 20 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான பத்திரிக்கை செய்தியில், கடந்த 14.09.2022ம் தேதி TTF வாசன் என்ற நபர், அவரது இரு சக்கர வாகனத்தில் Youtuber G.P. முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து, கோவை மாநகரம், D3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாலக்காடு மெயின் ரோடு, MDS பேக்கரி அருகே, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி, அதை பதிவு செய்து, அவரது Twin Throttlers என்ற Youtube channelல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது சம்மந்தமாக, D3 போத்தனூர் காவல் நிலைய குற்ற எண். 582/2022 u/s 279 IPC, 184 MV Actல் மேற்படி TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து ஊடகத்தினரை மிரட்டும் விதத்தில் TTF வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நிலையில், வழக்கில் இருந்து கைது செய்வதில் இருந்து தப்பிக்க பெங்களூரு நோக்கி இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற TTF வாசனை சூலூர் போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!