Tamilnadu

நண்பர்களே இப்போ என்ன ஆச்சுன்னா.. TTF வாசன் மீது வழக்குப்பதிவு : போலிஸ் அறிவிப்பில் சொல்லியிருப்பது என்ன?

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 20 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியான பத்திரிக்கை செய்தியில், கடந்த 14.09.2022ம் தேதி TTF வாசன் என்ற நபர், அவரது இரு சக்கர வாகனத்தில் Youtuber G.P. முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து, கோவை மாநகரம், D3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாலக்காடு மெயின் ரோடு, MDS பேக்கரி அருகே, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி, அதை பதிவு செய்து, அவரது Twin Throttlers என்ற Youtube channelல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக, D3 போத்தனூர் காவல் நிலைய குற்ற எண். 582/2022 u/s 279 IPC, 184 MV Actல் மேற்படி TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: TTF VASAN -இதை நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இதை நம்மால் தவிர்க்கமுடியாது!