Tamilnadu
"செல்போன் திருடிய திருடர் கவனத்திற்கு.." - COOL DRINKS கடையில் திருடியவருக்கு அறிவுரை வழங்கிய நபர் !
இராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலை கதிரவன். இவர் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே `லஸ்ஸி ஸ்பாட் (Lassi Spot)' என்ற பெயரில் ஒரு குளிர்பான கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி பகல் அவரது கடைக்கு ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து பார்ப்பதற்கு நல்லவர் போல் இருக்கும் நபர் ஒருவர் ஜூஸ் குடிப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு தேவையான ஜூஸை ஆர்டர் செய்து குடித்தார். பின்னர் அவர் அந்த கடை கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த கடை உரிமையாளரிடம் குடித்த ஜூஸுக்கான பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் செல்லுமுன் கல்லாப்பெட்டி டேபிளில் இருந்த ஓனரின் செல்போனை நேக்காக எடுத்து தனது சட்டைப்பையில் வைத்து கொண்டு நகர்ந்திருக்கிறார். பின்னர் அவர் சென்றபிறகு டேபிளில் இருந்த செல்போனை காணவில்லை என்று தேடி பார்த்தபோது அது கிடைக்கவில்லை.
எனவே கடையில் மாட்டியிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது ஜூஸ் குடித்து காசு கொடுக்க வந்த நபர் திருடியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அங்கிருந்தவர்கள் வற்புறுத்தியபோதும், அவர் தான் அதனை செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் செல்போன் திருடிய நபருக்கு தனது முகநூல் பக்கத்தில் அவரது புகைப்படத்திற் வெளியிட்டு அவருக்கு அறிவுரை வழங்குபடியான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "செல்போன் திருடிய திருடர் கவனத்திற்கு, நீங்கள் திருடிய செல்போனின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ.2,500 மட்டுமே.
ஆதலால் தயவு செய்து விற்க முயற்சிக்க வேண்டாம். வேண்டுமென்றால் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி " என்று குறிப்பிட்டிருந்தார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?