Tamilnadu
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை.. அரசு மீது பொய் குற்றச்சாட்டு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு என்கிற அளவில் தொடர் செய்திகள் வெளியாகி வருகிறது. இது தவறான செய்தி என்று பலமுறை தெரிவித்திருந்தாலும் கூட மீண்டும் இது போன்ற செய்தி பரப்பப்படுகிறது.
கடந்த ஒரு வாரங்களில் 5 அல்லது 6 மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அப்படி ஆய்வு செய்தபோது மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. அரசின் மீது உள்ள கோபத்தில் இது போன்று பொய்க் குற்றச்சாட்டைச் சிலர் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.
இதற்கு முன்பு வரையிலும் 32 இடத்தில் மட்டும் தான் மருந்து கிடங்கு என்பது இருந்தது, தற்போது நான்கு மருத்துவ கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டம் தோறும் மருந்து கிடங்கு என்கின்ற நிலையில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்