Tamilnadu

தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெற்ற சம்பூர்ணம் சாமிநாதன், இரா.மோகன் ஆற்றிய அரும்பணிகள் !

திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன்

திமுகவின் முப்பெரும் விழாவில் திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

ஒருங்கிணைந்த கோவை ,நீலகிரி மாவட்டத்தின் திமுக மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்றி தொண்டர்களை அரவணைத்து சென்ற சாதனை செம்மல் அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பெரியவர் பி. ஏ.சாமிநாதன் அவர்களின் மனைவி அம்மா சம்பூர்ணம்*சாமிநாதன் அவர்கள்.

1960-ல் அரசியலில் கணவனோடு இணைந்து அரசியலில் இணைந்து செயல்பட்டவர். 1963-ல் கழக கொடியேற்று நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியினர் கல்லால் தாக்கியபோது கூட விடாமல் கட்சி கொடியேற்றும் நிகழ்வை நடத்தினார். பின்னர் மிசா காலத்தில் கணவர் சிறை சென்றபோது கட்சியின் அறிவிக்கப்படாத மாவட்ட செயலாளராக செயல்பட்டு கட்சியை வழிநடத்திச்சென்றார்.

தலைவர் கலைஞரால் ஒரு சம்பூரணம் போல 10 சம்பூரணம் இருந்தால் கட்சியை யாரும் அசைக்கமுடியாது என புகழப்பட்டவர். ஒன்றுபட்ட கோவை மகளிர் அணி தலைவர், கழக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

கோவை திரு. இரா.மோகன்

2 )கோவை திரு. இரா.மோகன் அவர்களுக்கு ‘அண்ணா விருது’ வழங்கப்பட்டது. அவர் சார்பாக அவரின் மகன் விருதை பெற்றுக்கொண்டார்.

13 வயதில் நகர்மன்ற தேர்தலில் கழக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். கல்லூரி காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றார். பின்னர் மிசா காலத்தில் சிறை சென்றவர், கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றுள்ளார். அடுத்ததாக மக்களவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Also Read: "தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?