Tamilnadu
தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெற்ற சி.பி.திருநாவுக்கரசு , குன்னூர் சீனிவாசன் ஆற்றிய அரும்பணிகள் !
புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு
1) புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு அவர்களுக்கு, ‘பாவேந்தர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
1965-ல் புதுச்சேரயில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அப்போது சிறை சென்ற கழக தோழர்களுக்காக வழக்கறிஞராக பங்கேற்றார். மிசா காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1991-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலைஞரின் அரசு கலைக்கப்பட்டதால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். புதுச்சேரி கழக துணை அமைப்பாளர் பொறுப்புக்கு உயர்ந்து சிறப்பாக செயல்பட்டார். புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
குன்னூர் சீனிவாசன்
2) குன்னூர் சீனிவாசன் அவர்களுக்கு, ‘பேராசிரியர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
1950ம் ஆண்டு தனது 19ம் வயதில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வந்தியிருப்பு ஒன்றிய கழகத்தின் முதல் செயலாளரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பாளையம்கோட்டை,சேலம்,மதுரை, திருச்சி ஆகிய மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு