Tamilnadu
உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல்.. சம்பவத்தன்று கண்ணால் கண்ட நினைவலைகளை பகிர்ந்த அமைச்சர் PTR !
கடந்த 2001ம் செப்டம்பர் 11ஆம் தேதி ஆண்டு உலக ஊடகங்களின் கவனம் அனைத்தும் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் பக்கம் திரும்பியது. 1990களில் பிறந்த மக்கள் அதுவரை காணாத ஒரு தாக்குதலை ஊடகங்கள் படம் பிடித்துக் காண்பித்தது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த தாக்குதலை உலகம் ஒருபோதும் மறந்திருக்காது!
உலகின் தூங்கா நகரம் என வருணிக்கப்படும், அமெரிக்காவிற்கு சொந்தமான நான்கு சிறிய விமானங்களை தீவிரவாக குழு ஒன்று, ஹைஜாக் செய்தது. அப்படி, ஹைஜாக் செய்யப்பட்ட விமானத்தை தற்கொலைபடை தாக்குதலுக்காக பயன்படுத்தி, ஏவுகணை போல அந்த விமானங்கள் செயல்படுத்தியது அந்த தீவிரவாகக் குழுக்கள்.
முதலில் இரு விமானங்கள் நியூயார்க்கில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தை தாக்கியது. வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான முதல் விமானம், ‘நார்த் டவர்’ என்று சொல்லப்பட்டும் கட்டிடத்தை உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தாக்கியது.
தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், வாஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட மற்றொரு விமானம், இரட்டை கோபுரத்தின் ‘சவுத் டவர்’ என்று சொல்லப்பட்டும் இரண்டாவது கட்டிடத்தை உள்ளூர் நேரப்படி, 9.03 மணியளவில் தாக்கியது.
இந்த விமான தாக்குதலில் கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டிடத்தின் மேல் பகுதியில் பலர் சிக்கி வைத்தனர். அதேபோல் புகை நகரம் முழுவதும் சூழந்தது. தாக்குதலின் நிலைமையை உணர்ந்து மீட்பதற்கு அடுத்த 2 மணி நேரத்தில் 110 மாடி கட்டிடம் மடமடவென சரிந்தது.
மற்றொரு விமானம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதிய நிலையில், மற்றொரு விமானம் எதிலும் மோதாமல் நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த நான்கு தாக்குதலிலும் 2,977 பேர் உயிரிழந்தனர். இரட்டை கோபுரத்தில் 2606 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் மொத்தம் 125 பேர் கொல்லப்பட்டனர். மேலும் விமானங்களில் இருந்த 246 பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்து நேற்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தாக்குதல் குறித்த நினைவுகளை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ள அவர், "நான் 9/11/01 அன்று உலக வர்த்தக மையத்தில் இருந்தேன், அந்நிகழ்வு உலகின் நிலையின்மை குறித்த பெரும் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது.
தாக்குதல் நடந்த இடம் 6 மாதங்களுக்குப் பிறகும் கூட புகைந்துகொண்டிருந்தது அதன் பிறகு நான் D70 கேமரா வாங்கி, ஹோட்டல் பென்சில்வேனியாவில் Nikon U வார இறுதி வகுப்புகளில் சேர்ந்தேன் பிறகு நான் ஒளித்தோற்றம் ஆர்வமூட்டுவதாக இருக்கும் போதெல்லாம் தொடுவானை படம் பிடித்தேன்." என்று கூறியுள்ளார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!