Tamilnadu
"வேணும்னா எங்க கம்பெனியில் வேலை வாங்கி தாரேன்.. வாங்க" - எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜகமூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ராணுவ வீரர் இறப்பின் போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் ஆடியோ தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு ஆவேசமான எச்.ராஜா, இது போலியான ஆடியோ என்று எங்கள் மாவட்ட தலைவர் கூறியிருக்கிறார். யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ள ஆடியோவை பற்றி எல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள் அதற்கெல்லாம பதில் சொல்ல முடியாது எனக் கூறினார்.
மேலும், செய்தியாளரின் குடும்ப உறுப்பினர் குறித்தும் அவதூறாகப்பேசினார். தொடர்ந்து செய்தியாளருடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா, செய்தியாளரை பார்த்து நேர்மையாக இருக்க வேண்டுமானால் என்னிடம் வாருங்கள் நான் வேலை தருகிறேன்! என கூறினார்.
உடனே இதற்கு பதிலடி கொடுத்த செய்தியாளர், வேலையெல்லாம் எனக்கு வேண்டாம், உங்களுக்கு வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள், எங்கள் கம்பெனியில் வேலை வாங்கி தருகிறேன் என பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !