Tamilnadu

International Airportனா சும்மாவா.. மும்பைக்கு பிறகு அதிநவீன வசதியை கொண்டுள்ள சென்னை !- அது என்ன தெரியுமா?

இந்தியாவில் முதல் முறையாக மும்பை சிவாஜி விமானநிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் கேப்சூல் படுக்கை அமைக்கப்பட்டது. இது பயணிகளிடையே வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அது சென்னை விமான நிலையத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னை விமான நிலையத்தில் 4 படுக்கைகள் கொண்ட ' கேப்சூல் ஓட்டல் ' புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதன் வரவேற்ப்பை பொறுத்து விரிவுபடுத்தப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் முதல் 2 மணி நேரத்துக்கு ரூபாய் 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு பின்னர் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூபாய் 250 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த படுக்கையில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அதே நேரம் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் சேர்ந்து தங்க அனுமதிக்கப்படுவர்.

இங்கு உடமைகள் வைப்பதற்கான இடம் , செல்போன் சார்ஜ் செய்ய வசதி , புத்தகம் படிப்பதற்கான வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த படுக்கைகளில் ஒரு விமானத்தில் சென்னை வந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய காத்திருக்கும் ' டிரான்சிட் ’ பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், பயணிகளாக இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 1 லட்சம் ஏழைகளுக்கு 5 STAR HOTEL-ல் TREAT.. 23 வயது இளைஞருக்கு குவியும் பாராட்டு! யார் இந்த நவீன கர்ணன் ?