Tamilnadu
NOTA கூட போட்டி போடுறவங்கள எங்ககூட வச்சி பேசிட்டு இருக்கீங்க:செய்தியாளர் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்
கோவை ஈச்சனாரியில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் மேடை அமைக்கும் பணியை பார்வையிட்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்"இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்குகிறார்.முதல்வரின் உத்தரவின் பேரில், அவரது வருகையின் போது எந்த இடங்களிலும் தோரனையோ அல்லது பிளக்ஸ் மற்றும் கொடி கம்பங்கள் இருக்காது.
தமிழகத்தில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான மின் கட்டண உயர்வில் டிமாண்ட் charge மற்றும் fixed charge அதிகமாக உள்ளதாக சிறு ,குறு தொழில்முனைவோர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கான கட்டண குறைப்பு குறித்து பரிசீலனை செய்யப்படும்" எனக் கூறினார்.
பின்னர் பாஜக vs திமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "நோட்டாவோடு போட்டி போடுபவர்களை திமுகவோடு ஒப்பிட வேண்டாம். பாஜகவின் வாக்கு சதவீதம் எங்கே ? திமுகவின் வாக்கு சதவீதம் எங்கே.? எனவே ,பாஜகவையும் - திமுகவையும் ஒப்பிட்டு பேசவேண்டாம்
களத்தில் ( பாஜக )இல்லாதவர்களைக் ஊடகங்களும் , சமூக வலைதளங்களும்தான் பெரிதாக காட்டுகிறீர்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர்கள் மீது அவர்கள் போஸ்டர் ஒட்டி Facebook live செய்தால் அவர்கள் பெரிய கட்சியா? .நாளை பொதுகூட்ட மேடையில் மாற்று கட்சியை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளைக் நீங்கள் பார்க்கலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, மருதமலை சேனாதிபதி, முன்னாள் எம்பி நாகராஜ் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!